சென்ற மதம் (ஜனவரி 22 & 23), பாரதியார் பல்கலை செல்லும் வாய்ப்பு கிட்டியது. ஹரியின் (மஞ்சுவின் தம்பி) குழந்தை பார்க்க ஈரோடு போன வேலையில், மருதமலையையும், பாரதியாரையும் தரிசித்தேன்.
சனி அன்று அதிகாலை காரில் கிளம்பினோம். long drive வாழ்க்கையின் ஒரு அங்கமாகி விட்டது. ஈரோடு சென்று குழந்தையை பார்த்து விட்டு (it was a cute little girl baby and i was very excited to carry her....long time, since carrying infants)...கோயம்புத்தூர் இரவில் சென்றோம். எண்ணம் சிறகடிக்க, மனசெல்லாம் மத்தாப்பூ. (Not just that, i also had the pressure of explaining the places and incidents to Atulya and Manjula, since they kept wondering, why i had been smiling always)...
காலம் எல்லாவற்றையும் மாற்றுகிறது. கோவைக்கும் விதிவிலக்கு கிடையாது. கிராஸ் கட் ரோட்டில் உள்ள லக்ஷ்மி ஹோடேலில் தங்கினோம். கிராஸ் கட் ரோடு இப்போது oneway ஆகி விட்டது. நிறைய branded shops வந்து விட்டது. ஆனாலும் அன்னபூர்ணா அப்படியே உள்ளது.
Sunday மருதமலை சென்றோம். This time, i drove up. மலைகளை காணும் போதெல்லாம் எனக்கு தோன்றுவது "ஒரு பொல்லாப்புமில்லை" (courtesy - Balakumaran). இயற்கை என்றுமே பிரம்மாண்டம், என்றுமே அழகு, என்றுமே இளமை, என்றுமே வியப்பு. மருதமலையின் மேல் தனியாக அமர்ந்து என்ன சிறகில் சிறகடித்து பறந்த நாட்கள்
மனதில் விரிந்தன. முதன் முதலில், என் வகுப்பில் அனைவரும் (note the point - everyone) சென்ற இடம் மருதமலைதான்.
இன்றளவும் மருதமலையில் பெரிய மாறுதல்கள் காணவில்லை , அல்லது, நான் காண விரும்பவில்லை. நான் சென்றது ஞாயிறு என்றாலும், அழகான யுவதிகளுக்கோ அல்லது உடன் வரும் இளைஞர்களுக்கோ குறைவில்லை.
கல்லூரி நாட்களில் ஒரு கோயிலுக்கும் உள்ளே சென்றதில்லை. கல்யாணத்திற்கு முன்னால் வரை அதற்கான அவசியமும் தெரிந்ததில்லை. ஆனால், அட்டுல்யா பிறந்த பின்பு, கோயில் வாழ்க்கையின் ஓர் அங்கமாகிவிட்டது (Where else you think, you teach your kids traditions and history, i reckon...)
கல்லூரி நாட்களில் மருதமலை ஒரு போக்கிடம் மட்டும் கிடையாது. அதற்கும் மேல். களைப்பான நடைக்கு பின் படுத்து இளைப்பாற இயற்கை தந்த படுக்கை, மன சஞ்சலமான நேரங்களில் தாய் மடி, உற்சாகமான நேரங்களில் ஏறி விளையாடும் அடர்ந்த காடு. இப்படி நிறைய, என்னால் இன்றும் வரையறுக்க முடியவில்லை.
கோயிலில் பெரிய மாறுதல்கள் இல்லை. கட்டணம் உள்ளது. செல்லும் பாதை கம்பிகள் மூலம் நெறி (கட்டு) ப் படுத்தப்பட்டுள்ளது. முருகனை அன்று பார்த்தது இல்லை என்பதால், இப்போது வித்தியாசம் காண இயலவில்லை.
நாங்கள் மலை ஏற செல்லும் வழியில் சுவர்கள் கட்டப்பட்டுள்ளது. மஞ்சுவிடமும், அட்டுவிடமும் எங்கள் மலை ஏற்ற அனுபவங்கள் பற்றி கூறியதெல்லாம் எனக்கு நானே நினைவூட்டும் முயற்ச்சி என்றே நினைக்கிறேன். ( மழை நின்ற பின்னாலும் இலை சிந்தும் துளி அழகு).
எங்கள் சிகரம் (மருதமலை சிகரம்) தொட்ட கதை கேட்ட அட்டு இப்போது வாசுவை (தம்பா) ஒரு ஹீரோ போலவே நினைத்துள்ளான்.
மருதமலை என்று சென்றாலும் திரும்பி வர மனம் வராது. இந்த முறையும் விதி விலக்கு அல்ல.
கீழே இறங்கி வந்த பின், மலையை ஏக்கத்துடன் திரும்பிப் பார்த்தேன். பைரனின் கவிதை வரிகளின் அர்த்தம் புரிந்தது.
"அழகாய் பரந்து விரிந்து கிடக்குது காடு.
போக வேண்டிய இடம் மிக தூரம் உள்ளது".
Next I went to Bharathiar university. Will be in the next blog.