சரியாக ஒரு வருடம் ஆகி விட்டது அம்மா எங்களை விட்டு சென்று. சென்ற வருடம் (2013 ஜனவரி 28 ஆம் நாள்) அம்மா சிதையில் படுக்க வைக் கப்படிருந்ததிற்கும் அவர்கள் அதற்க்கு 8 மாதங்கள் வீட்டில் படுத்து இருந்ததிற்க்கும் எந்த ஒரு வித்யாசமும் என்னால் கண்டு பிடிக்க முடிய வில்லை. அம்மாவின் மறைவை விட அந்த நினைப்பே அதிகம் அழுகை தந்தது.
அம்மாவை கடைசியாக உயிருடன் பார்த்தது நவம்பர் 2012ல். அம்மாவிற்கு நான் கூப்பிடுவது கேட்கிறதா இல்லையா என்று கூட தெரியவில்லை. கைகால்கள் குறுக்கி, கண்கள் மூடி, வெறும் எழும்பும் தோலுமாக, முகத்தில் நிரந்தர வலியுடன் படுத்து இருந்தது என்னால் இன்றும் மறக்க முடியவில்லை.
காந்தி எவன் ஒருவன் தன்னைப் பற்றி கர்வம் கொள்கிறானோ அல்லது மிகுந்த ஆற்றல் மிக்கவனாக உணர்கிறானோ, அவன் அப்போது உலகின் கடை நிலையில் எந்த வித உதவ முடியாத நிலையில் இருக்கும் மனிதனை நினைத்து கொள், உன் கர்வம் அடங்க்கும் என்பார். எனக்கு என் அம்மாவின் கடைசி கால படுக்கை நினைப்பு போதும்.
அம்மாவின் வாழ்க்கை ஒரு முழு வட்டம் சுற்றி விட்டதாக உணர்ந்தேன். யாரையும் அடையாளம் கண்டு கொள்ளவோ அல்லது தேடவோ இல்லை. அம்மா தனது வாழ்கையின் மீதான பிடிப்பை விடுவதாக உணர்ந்தேன். ஆனாலும் அம்மாவின் கால் தொட்டு சென்னைக்கு விடை பெறும் பொழுது, அம்மா நம்மைப் பார்க்காமல், நம்மிடம் சொல்லாமல் செல்ல மாட்டார்கள் என்ற நம்பிக்கை இருந்தது. தூத்துக்குடி செல்வதைக் கூட சிங்கப்பூர் போன் செய்து சொல்லும் அம்மா, உலகை விட்டு செல்லும் போது, எல்லா பிள்ளைகளுக்கும் தகவல் வரும் என அசைக்க முடியாத நம்பிக்கை.
ஆனால் "life of pi " ல் வரும் "richard parker" போல திரும்பிப் பார்க்காமல் அம்மா எங்களை விட்டு சென்ற போதுதான் நிதர்சனம் புரிந்தது. எவ்வளவு அழுதாலும், என்னதான் செய்தாலும் இனி அம்மாவைப் பார்க்க முடியாது என்று ஒவ்வொரு முறை புரியும் போதும், துக்கப் பந்து தொண்டையை அடைக்கிறது.
அம்மா நம்மை விட்டு மறைந்து விட்டார்கள் என்ற புரிந்துணர்வே சில நாட்கள் சென்ற பின்தான் வந்தது. அம்மா நடு வீட்டில் படுக்க வைக்கப்பட்டிருந்த போதும், சுற்றி சாஸ்திர சம்பிரயதயங்கள் நடக்கும் போதும், அம்மா எழுந்து எல்லோரையும் பார்த்து விட மாட்டார்களா என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக அந்த நம்பிக்கை மடத்தனம் என்று புரிந்த போது , என் புத்திசாலி தனத்தின் மேலே எனக்கே கோபம் வந்தது. அம்மாவிற்கு சிதை மூட்டும் போது, வேதனையை விட விரக்தியே மேலோங்கி இருந்தது
கடந்த ஒரு வருடமாக எப்போதும் இல்லாத அளவிற்கு அம்மாவை நினைத்து பார்க்கிறேன். நினைவுகள் வாழ்கையை வழி நடத்துவதில்லை. ஆனால் அவை ஒரு சுகமான வலி தருகின்றன. ஆறி விட்ட புண்ணின் மீது கையை வைத்து அழுத்தும் போது வரும் வலி போல.
அம்மாவின் ஏன் பெற்றோரின் தியாகங்கள் நமக்கு தெரிவதில்லை, நாம் பெற்றோர் ஆகும் வரை. அந்த புரிதலுடன் நாம் பெற்றோரை அணுகும் காலகட்டமும் குறைவு. அம்மா சில விசயங்களை ஏன் செய்தார்கள் என்பது இன்றும் எனக்கு புரியாதது. ஆனால் அம்மாவின் எந்த ஒரு செயல்களுமே ஐந்தில் ஏதாவது ஒரு பிள்ளைக்கு நன்மை செய்வதற்காக இருக்கும் என்றே நம்புகிறேன்.
அம்மாவின் பெயரில் உள்ளது பெரிய வீடு. அதை 2 அண்ணன்களுக்கு எழுதி வைப்பதாக முதலிலேயே சொல்லி இருந்தார். அக்காவிற்கு நகையில் ஒருன் பங்கு எடுத்துக் கொள்ள சொல்லி இருந்தார். இவையே அம்மாவின் உயிலிலும் இருந்தது. அவை போக மதி அண்ணனுக்கும் ஒரு கடிதம் இருந்தது, எல்லோருடனும் சேர்ந்து இருக்க சொல்லி. இவை எல்லாமே எனக்கு தெரிந்தவை. 2012 முடிவு மற்றும் 2013 பிறப்பு, எனக்கு கடுமையான பொருளாதார நெருக்கடி மிகுந்த வேளை. புது வீடு தாமதம், அம்மா தாதியர் செலவு மற்றும் மருந்து செலவு, புது வீடு கடைசி கட்ட செலவுகள் என கழுத்தை நெரிக்கும் அளவு செலவுகள். அம்மாவின் பொருளாதார கோட்பாடை பார்த்தால், எனக்கு கடன் வாங்குவதில் விருப்பம் கிடையாது. car விடுத்து busஇல் சென்றேன். மற்ற செலவுகள் குறைத்தேன். ஆனாலும் பொருளாதார நெருக்கடி. அம்மா இறந்து 16 வது நாள். பூஜை முடிந்து வெளியில் நிற்கும் போது, post வந்தது அம்மா பெயர்க்கு. அவர்களின் வைப்பு நிதி 50000 mature ஆகி இருந்தது. Nominee என்று என் பெயர். அம்மாக்கள் என்றும் பிள்ளைகளை மறப்பதும் இல்லை கைவிடுவதும் இல்லை.
அம்மாவைப் பற்றி இப்படி பல உதாரணங்கள் கூறலாம். ஆனால், இவை எல்லாவற்றிக்கும் அப்பாற்பட்டவர் அம்மா. சிறு வயதில் அம்மா அற்ற வாழ்கையை நினைத்ததே இல்லை. இன்றும் கூட அம்மா இறந்த பின்னும் வாழும் வாழ்க்கை யதார்த்தத்தில் சந்தோசங்கள் மற்றும் துக்கங்கள் நிறைந்தது ஆக இருந்தாலும், நான் அம்மாவை இழந்தவன் என்பது எனக்கு மிகவும் வேதனை அளிப்பது ஆகவே உள்ளது. பாசம், காதல், துக்கம், அன்பு, கோபம், வருத்தம் போல தாய்மையும் ஒரு உணர்வு. அது என் வாழ்க்கையில் முடிந்து விட்டது எனக்கு நான் ஒன்றை இழந்து வாழ்வதையே அதை மீண்டும் என்னால் அடைய முடியாததையே எனக்கு நினைவூட்டுகிறது.
இன்று முதல் வருட நினவு நாள். அம்மாவிற்கு பிடித்த இனிப்பு ரவா பணியாரம். கொஞ்சம் அதிகமே உப்பு கரித்தது.